Saturday, October 16, 2010

நவராத்திரி






இந்த வருட நவராத்திரி எங்க வீட்டு கொலு.
என் சின்ன மகள் பார்க் செய்தாள்.
இன்று ஒன்பதாம் நாளாகிய சரஸ்வதி, ஆயூத பூஜை செய்வது வழக்கம்.
காலையில் குளித்து தேவிக்கு சர்க்கரை பொங்கல், கொண்டகடலை சுண்டல், வடை, பாயசம் செய்து எல்லா புத்தகஙகளும், ஆயூதங்கள்,சங்கித வாத்தியங்கள், கார், போன்ற எல்லாவற்றுக்கும் குங்குமம்,மஞ்சள் இட்டு பூக்கள்,அட்சதை போட்டு நிவேதனம் செய்து வருகிறவர்களுக்கும் அந்த ப்ரசாததை கொடுத்ப்பது வழக்கம்.
விஜயதசமி நாளாகிய நாளை குளித்து பூக்கள் அட்சதை போட்டு பூஜையில் வைத்திருக்கும் புஸதகத்தை எடுத்து ஒரிரண்டு வரிகள் படித்து, பாட்டு பாடி
பாயசம், பழம் போன்றவை வைத்து நிவேதனம் செய்து, கொலுவுக்கும், மங்கல ஆரத்தி எடுத்து ஒரிரண்டு பொம்மைகளை படுக்க வைப்பது வழக்கம்.
பின் அதை எடுத்து உள்ளே வைத்து அடுத்த முறை எடுத்து இதே போல் கொண்டாடுவது வழக்கம்.

3 comments:

ராமலக்ஷ்மி said...

சின்னமகளின் கைவண்ணத்தில் பூங்கா அருமை. கொலு அழகு.

நவராத்திரி வாழ்த்துக்கள்!!

vanathy said...

very nice!

குறையொன்றுமில்லை. said...

rompa nallaa irukku.